
லிலோன் ,நவ 6 – மத்திய பிலிப்பைன்ஸில் Kalmaegi புயலில்
மரணம் அடைந்தவர்கனின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ள வேளையில் மேலும் 127 பேர் காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது . அதே வேளையில் Kalmaegi புயல் தற்போது வியட்னாமை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் செபு மாநிலத்தின் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கார்கள், ஆற்றோரங்களில் உள்ள குடிசைகள் மற்றும் பெரிய கப்பல் கொள்கலன்களை கூட அடித்துச் செல்லப்பட்டன.
தேசிய சிவில் பாதுகாப்பு அலுவலகம் 114 இறப்புகளை உறுதிப்படுத்தியது, இருப்பினும் அந்த எண்ணிக்கையில் செபு மாநில அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட கூடுதலான 28 பேர் சேர்க்கப்படவில்லை.
செபு city க்கு அருகேயுள்ள Liloan நகரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 35 சடலங்கள் மீட்கப்பட்டன . வீட்டில் அளவுக்கு அதிகமாக வெள்ள நீர் புகுந்ததால் மாற்றுத் திறனாளி ஒருவரும் இறந்த கிடந்தார். அருகேயுள்ள Negros தீவில் 30 பேர் மரணம் அடைந்தனர்.



