Latestமலேசியா

பிளஸ் நிறுவனத்தின் பல தடங்கள் சீரான போக்குவரத்துக்கான MLFF கட்டண வசூல் முறை சலுகை நிறுவனத்தின் தனியார் முயற்சியாகும் – அகமட் மஸ்லான்

கோலாலம்பூர், பிப் 19 –  பிளஸ் மலேசியா பெர்ஹாட்டினால் ( PLUS Malaysia Bhd) செயல்படுத்தப்படும் பல தடங்களைக் கொண்ட சீரான போக்குவரத்துக்கான MLFF கட்டண வசூல் முறை சலுகை நிறுவனத்தின் ஒரு தனியார் முயற்சியாகும்.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி முடிவடைந்த மத்திய Tolling Company (CTC) நியமன ஒப்பந்தத்திற்கும் அரசாங்கத்திற்கும் முன்மொழியப்பட்ட நிறுவனமான KJS-SEP JV க்கும் இடையிலான உடன்பாட்டிற்குப் பிறகு , MLFF ஐச் செயல்படுத்துவதற்கு சலுகையாளருக்கு உரிமை உள்ளது என பொதுப்பணி துணையமைச்சர் Datuk Seri Ahmad Maslan தெரிவித்தார்.

சலுகைதாரர்கள் தங்கள் சொந்த MLFF கட்டண வசூல் முறையை செயல்படுத்துவதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர்.

இருப்பினும் அமைச்சரவையால் தீர்மானிக்கப்படும் ஆலோசனை மற்றும் ஆய்வுகளுக்கு இது உட்பட்டது.

போக்குவரத்து அமைச்சு , நிதி அமைச்சு , சட்டத்துறை மற்றும் பொது-தனியார் ஒத்துழைப்பு பிரிவு ஆகியவற்றிலிருந்து தகவல் மற்றும் கருத்துக்களை பெறவேண்டியிருப்பதாக இன்று மக்களவையில் கேள்விக்கு பதில் அளித்தபோது அகமட் மஸ்லான் தெரிவித்தார்.

அடுத்த ஏப்ரலில் தொடங்கப்படவுள்ள MLFF முன்னோடி சோதனையைத் தொடர்ந்து அமைச்சுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் (Datuk Seri Dr Wee Ka Siong) எழுப்பிய துணைக் கேள்விக்கு பதில் அளித்தபோது அகமட் மஸ்லான் இதனை தெரிவித்தார்.

MLFF இன் நிலையை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நெடுஞ்சாலை சலுகையாளருடனான பேச்சுவார்த்தைகளின் அண்மைய நிலை குறித்து வீ கா சியோங்கின் மூல கேள்விக்கு பதிலளித்தபோது , நெடுஞ்சாலை பயனர்களின் வசதியை உறுதிசெய்ய MLFF கட்டண வசூல் முறையை செயல்படுத்துவதில் அமைச்சு உறுதியாக உள்ளது என்று அகமட் மஸ்லான் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!