கோலாலம்பூர், டிச 11- ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்திட்ட கட்சியின் Bon பத்திரத்தின் விதிமுறைகளை மீறியதற்காக சுரைடா கமாருடின் பிகேஆருக்குச் செலுத்த வேண்டிய இழப்பீடு தொகையை மேல்முறையீட்டு நீதிமன்றம் 10 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 100,000 ரிங்கிட்டாகக் குறைத்தது. பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான சுரைடா Bon உத்தரவாத பத்திரத்தின் விதிமுறைகளை மீறியிருப்பதாக கூறியதோடு அவர் முன்பு செலுத்த உத்தரவிடப்பட்ட 10 மில்லியன் ரிங்கிட் தொகை ‘அதிகமானது என்பதால் அவர் இழப்பீடு வழங்க வேண்டிய தொகை 100,000 ரிங்கிட்டாக குறைக்கப்பட்டுள்ளதாக மூவர் கொண்ட நீதிபதிகள் கொண்ட குழுவிற்கு தலையேற்றிருந்த நீதிபதி சீ மீ சுன் (See Mee Chun ) தீர்ப்பளித்தார்.
10 மில்லியன் ரிங்கிட் தொகையை அவர் மட்டும் தாங்கிக் கொள்வது நியாயமானது அல்ல. கட்சிக்கு இழப்பீடு பெற உரிமை உண்டு, ஆனால் 10 மில்லியன் ரிங்கிட்
இழப்பீடாக இல்லையென அவர் கூறினார். மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை விட்டு வெளியேறியதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். செலவுத் தொகையாக 40,000 ரிங்கிட் வழங்கும்படியும் சுரைடாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷெரட்டன் நகர்வைத் தொடர்ந்து பெர்சத்துவில் சேர்ந்தபோது கட்சி விதியின் உடன்பாட்டை மீறியதாகக் கூறி சுரைடாவிற்கு எதிராக பிகேஆர் வழக்குத் தொடர்ந்தது.