பீகாரின் இளம்இந்திய MLA மைதிலி தாக்கூர் பாடிய பாடல் சமுக வலைத்தளங்களில் வைரல்

பட்னா, நவம்பர் 19-இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அலிநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் தான் 25 வயது பெண் மைதிலி தாக்கூர்…
இன்றையத் தேதிக்கு இவர் தான் பீஹாரின் இளம் சட்டமன்ற உறுப்பினர்.
அதை விட பெரிய விஷயம் என்னவென்றால், 21-ஆம் நூற்றாண்டில் பிறந்த இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் பெயர் பதித்துள்ளார்.
இதன் மூலம், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் எழுதாத சட்டமாக இருந்த ஒரு தலைமுறைத் தடையை அவர் உடைத்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பிரபலமான முகமாக இருந்து வரும் நாட்டுப்புற பாடகியான மைதிலி தாக்கூர், அக்டோபரில் பா.ஜ.கவில் இணைந்த ஒரே நாளில் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்.
தேர்தலில் 84,915 வாக்குகள் பெற்று வெற்றியும் பெற்றார்;
அரசியலில் புதிய முகமாக இருந்தாலும், “அலிநகரின் மகள்” என்ற அடையாளத்துடன் மக்களுக்கு சேவை செய்வதே தனது குறிக்கோள் என மைதிலி கூறுகிறார்.
இந்நிலையில், யார் இந்த மைதிலி என இணையவாசிகள் தேடியதில், அஜித் குமாரின் ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே..” பாடலை கடந்த 2020-ல் மைதிலி பாடி வெளியிட்டிருந்த வீடியோ அவர்களின் கண்ணில் பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற “டிஜிட்டல் நாட்டுப்புறக் கலைஞர்” என்ற நிலையிலிருந்து, அரசியல் நம்பிக்கை நட்சத்திரமாக மைதிலி உருவாகியுள்ளார்.



