
பீகார், ஜனவரி 6 – உலகிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படும் 210 டன் எடையுள்ள சிவலிங்கம் பீகாரை வந்தடைந்துள்ளது. வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதியன்று வேத மந்திரங்கள் முழங்க மகா பிரதிஷ்டை நடைபெறவுள்ளது.
33 அடி உயரமும், 33 அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கம், தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் ஒரே கருங்கல் துண்டில் உருவாக்கப்பட்டது. இந்தச் சிவலிங்கம் சிறப்பு வடிவமைப்பிலான லாரியில் பீகாருக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த பிரதிஷ்டை நிகழ்வில் கைலாச மானசரோவர், கங்கோத்திரி, Hardwar, Prayagraj மற்றும் Sonepur ஆகிய ஐந்து புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நீர் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும். மேலும், ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
120 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் Virat Ramayan Mandir எனப்படும் ஆலயம், 2030க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 270 அடி உயரத்துடன், 18 கோபுரங்கள் மற்றும் 22 துணைக் கோயில்களை கொண்ட உலகின் மிகப்பெரிய இந்து ஆலயமாக உருவாகும். இந்த திட்டத்தின் அனைத்து செலவுகளையும் Mahavir Mandir Trust ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



