
கோலாலம்பூர், அக்டோபர்-22 – புகைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடை மீறப்படுவதாக புகார்கள் எழும் பகுதிகளில், சுகாதார அமைச்சு ரோந்துப் பணிகளை அதிகரிக்கவுள்ளது.
சுகாதார துணைத் தலைமை இயக்குநர் டத்தோ Dr நோர்ஹாயாத்தி ருஸ்லி (Datuk Dr Norhayati Rusli) அதனைத் தெரிவித்தார்.
அக்டோபர் ஒன்றாம் தேதி அமுலுக்கு வந்த சட்டம் 852 எனப்படும் பொது சுகாதாரத்திற்கான புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024-ங்கின் கீழ், 28 இடங்கள் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சலவைக் கடைகளும் (dobby), வேலையிட கட்டடங்களும் அப்பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அக்டோபர் 1 முதல் 21 வரை கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் அத்தகைய 352 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதில், மொத்தமாக 8,250 ரிங்கிட் அபராதத் தொகையை உட்படுத்தி, 33 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டதாக அவர் சொன்னார்.
அவற்றில் 18 நோட்டீஸ்கள் உணவகங்களையும், எழு அறிவிக்கைகள் வணிக வளாகங்களையும், 8 அறிவிக்கைகள் பொது நிறுத்துமிடங்களையும் உட்படுத்தியுள்ளன.