
கோலாலம்பூர், மார்ச் 24 – கடைகளில் புகையிலை பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அமல்படுத்துவது தற்போது கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தத் தடையானது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரத் திட்டமிடப்பட்டதோடு, இதனால் புகையிலை பொருட்களின் தயாரிப்புகளை விற்கும் 51,000 த்திற்கும் மேற்பட்ட கடைகள் பாதிப்புகளை எதிர்நோக்கும்.
எனினும் முழு இணக்கத்திற்கான காலக்கெடு இப்போது அக்டோபர் 1 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் செயலாக்கம் படிப்படியாக நடைபெறும் என்று சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
பிற நாடுகளில் இதேபோன்ற செயலாக்கங்களின் செயல்திறன் மற்றும் நடைமுறைத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த தடையைச் செயல்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான முறையாக கேன்வாஸ் அட்டைகளுக்கு பதில் மூடப்பட்ட பெட்டிகளைப் பயன்படுத்திவருகின்றனர்.
இந்த நடவடிக்கை, மறைமுக விளம்பர நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு முக்கியமாக இருக்கும் என்பதோடு புகையிலைப் பொருட்களை காட்சிக்கு வைப்பதற்கான தடையின் நோக்கத்திற்கு எதிராக இருக்கும் .
எனவே, மூடப்பட்ட அலமாரிகள் விவரக்குறிப்புகளின்படி நிறுவப்படுவதை உறுதிசெய்ய, சுகாதார அமைச்சு சில்லறை விற்பனையாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றும்.
காலப்போக்கில் இதற்கான இணக்கம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு இந்த செயல்முறை அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.