
புக்கிட் காயு ஹீத்தாம், ஆகஸ்ட்-18 – புக்கிட் காயு ஹீத்தாம் எல்லை வழியாக மலேசியா வந்திறங்கிய 8 பேருக்கு, கெடா குடிநுழைவுத் துறையின் ஒத்துழைப்புடன் AKPS எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் நுழைவு மறுப்பு நோட்டீசை வழங்கியுள்ளது.
சுற்றுப் பயணிகளாக மலேசியாவுக்குள் நுழைவும் நிபந்தனைகள் எதனையும் அவர்கள் பூர்த்திச் செய்யாததே அதற்குக் காரணம் என, புக்கிட் காயு ஹீத்தாம் AKPS கமாண்டர் Mohd Nasaruddin M Nasir கூறினார்.
ஒரு பாகிஸ்தானிய ஆடவர், 2 இந்தியப் பிரஜைகள், ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டவர், 3 இந்தோனேசியப் பெண்கள் மற்றும் 1 இலங்கை ஆடவர் ஆகியோரே அவர்களாவர்.
இதையடுத்து வந்த வழியே சொந்த நாட்டுக்கு திரும்பி போகுமாறு அவர்கள் பணிக்கப்பட்டனர்.
எனினும், அவர்களிடமிருந்து எந்தவொரு பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை; குற்றச்செயல் அம்சங்களும் கண்டறியப்படவில்லை.