Latestமலேசியா

புக்கிட் ஜாலிலில் கருத்தரங்கின் போது கால்சட்டையைக் கழற்றி சுய இன்பம் செய்த மாணவரா? பல்கலைக்கழகம் மறுப்பு

புக்கிட் ஜாலிலில் கருத்தரங்கின் போது கால்சட்டையைக் கழற்றி சுய இன்பம் செய்த மாணவரா? பல்கலைக்கழகம் மறுப்பு

புக்கிட் ஜாலில், பிப்ரவரி-10,

புக்கிட் ஜாலிலில் ஒரு கருத்தரங்கின் போது கால்சட்டையைக் கழற்றிய இளைஞனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் APU எனப்படும் ஆசிய பசிஃபிக் தொழில்நுட்ப மற்றுப் புத்தாக்கப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தது.

எனினும், முன்னதாக வைரலானது போல அவன் சுயஇன்பத்தில் ஈடுபடவில்லை என APU தலைமை செயல்பாட்டு அதிகாரி Gurpardeep Singh தெளிவுப்படுத்தினார்.

தவிர, கருத்தரங்கை APU ஏற்பாடு செய்யவில்லை. மாறாக சில பள்ளிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன என்றார் அவர்.

கருத்தரங்கின் போது அவன் கால்சட்டையைக் கழற்றியது கண்டறியப்பட்டதும், ஆசிரியரால் கடிந்துகொள்ளப்பட்டான்.

பின்னர் எழுந்து கால்சட்டையை திரும்பவும் மாட்டிக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினான்.

_”20 வயதிலான அவ்விளைஞன் நிச்சயமாக APU மாணவனோ அல்லது பணியாளரோ கிடையாது. இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்குள் அவன் எப்படி நுழைந்தான் என்பது குறித்து உள் விசாரணை நடைபெறுகிறது”_ என Gurpardeep சொன்னார்.

இவ்வேளையில் பின்னர் போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதில், அவ்விளைஞன் ஸ்ரீ பெட்டாலிங் பகுதியில் கைதானான்.

மனநலம் பாதிக்கப்பட்டவன் எனக் கூறப்படும் அவனை போலீஸார் விசாரணைக்காக 3 நாட்கள் தடுத்து வைத்துள்ளனர்.

முன்னதாக, கருத்தரங்குத் தொடங்கிய 40 நிமிடங்களில் அப்பையன் கால்சட்டையைக் கழற்றி சுயஇன்பத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவி அதிர்ச்சியில் அழுததாகவும் கூறி வீடியோ வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!