
கோலாலம்பூர், பிப்ரவரி 4 – புக்கிட் பிந்தாங் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு அழகு நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில், சட்டவிரோதமாக வேலை செய்த 15 வெளிநாட்டவர்கள் குடிநுழைவுத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த அழகு நிலையம் சுகாதார அமைச்சின் அனுமதி இன்றி இயங்கி வந்ததுடன், சமூகப் பயண அனுமதி பெற்ற வெளிநாட்டவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியதாகவும் கூறப்படுகின்றது.
பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று மேற்கொண்ட Ops Dandan நடவடிக்கையின் போது 18 பேரை பரிசோதித்ததில், சீனாவைச் சேர்ந்த 13 பேரும், மியான்மாரைச் சேர்ந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban கூறினார்.
ஆரம்ப விசாரணையில், சீன நாட்டவர்கள் சமூகப் பயண அனுமதியில் நுழைந்து, அழகு சிகிச்சை பணிகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. சோதனையின் போது, பணியாளர் உடைகள், கைப்பேசிகள், மடிக்கணினிகள், சிசிடிவி உபகரணங்கள் மற்றும் வணிக ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள், குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதைத் அந்த நிலையத்தில் பணியாற்றிய மூன்று உள்ளூர் பெண்களுக்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.



