
சுக்காய், ஏப் 15- Pantai Teluk Mak Nik கிற்கு அருகே Bukit Bendera மலையேறும்போது நான்கு தோழிகள் கீழே விழுந்ததைத் தொடர்ந்து பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் உள்ளனர்.
18 வயதுடைய அந்த இளம் பெண்கள் அனைவரும் மலையேறும்போது திடீரென மலையோரத்திலிருந்து கீழே விழுந்ததால் அவர்களில் ஒருவர் இடுப்பில் காய்த்திற்கு உள்ளானதால் நடக்க முடியாத சூழ்நிலைக்கு உள்ளானார். இதர மூவர் சொற்ப காயத்திற்கு உள்ளாகினர்.
இவர்கள் அனைவரும் தீவிர முயற்சிக்குப் பின் உதவியை பெறுவதற்கு கெமமான் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலையத்துடன் தொடர்பு கொண்டனர்.
தகவல் கிடைக்கப் பெற்ற ஏழு நிமிடங்களுக்குப் பின் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு மீட்பு நிலைய அதிகாரிகளும் உறுப்பினர்களும் விரைந்து வந்ததோடு ஆம்புலன்ஸ் வண்டியுடன் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை கெமமான் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதாக கெமமான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி Junaidi Mohd தெரிவித்தார்.