Latestமலேசியா

புக்கிட் மெர்தாஜாமில் நிர்வாணக் கோலத்தில் ஆயுதமேந்திய மியன்மார் ஆடவன் வெறித்தனம்; milo ais கொடுத்து சாந்தப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்

செபராங் பிறை, ஆகஸ்ட்-16 – பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் ஒரு மியன்மார் ஆடவர், கையில் கூர்மையான ஆயுதத்தோடு திடீரென வெறித்தனமாக நடந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.

உடனடியாக தீயணைப்பு-மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, 30 வயதிலான அவ்வாடவரை ஆசுவாசப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தீயணைப்பு வண்டியிலிருந்து தண்ணீரைப் பாய்ச்சி அவரை சாந்தப்படுத்தியதோடு, குடிப்பதற்கு milo ais பானமும் கொடுக்கப்பட்டது.

பின்னர் ஒருவழியாக அந்நபரைத் தேற்றி, எங்கும் ஓடாமல் பார்த்துக் கொண்ட தீயணைப்பு வீரர்கள், மேல் நடவடிக்கைக்காக அவரைப் போலீஸிடம் ஒப்படைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!