Latest

புக்கிட் மெர்தாஜாமை அதிர வைத்த Enrico’s மாட்டுப் பொங்கல்;300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் மெர்தாஜம், ஜனவரி-18-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் Enricos நிறுவனம் நடத்திய மாட்டுப் பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

Raviraj Sdn Bhd நிறுவனத்தாருக்குச் சொந்தமான Alma, Ladang Seladang தோட்டத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய இவ்விழாவில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது Enrico’s நிறுவனத்தின் இரண்டாவது மாட்டுப் பொங்கல் விழாவாகும்.

முதல் விழா கடந்தாண்டு கெடா மாநிலத்தில் நடைபெற்றது; ஆனால் இம்முறை பினாங்கில் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினராக, பினாங்கு துணை முதல்வர் Jagdeep Singh Deo-வின் சிறப்பு அதிகாரி டத்தோ ராமசந்திரன் வந்திருந்தார்.

Enrico’s நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், தலைமை செயலதிகாரி SK Sundram, Sri Murugan Centre நிறுவனர்களில் ஒருவரான Dato L Krishnan, மற்றும் சிறப்பு அதிகாரி ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாடுகளை குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் வைத்து, அவற்றுக்கு பரிமாறினர்.

பொங்கல் போட்டி, கோலம் வரைதல், பானை வரைதல் போன்ற பாரம்பரிய போட்டிகளும் நடத்தப்பட்டன.

விழாவில் ஜல்லிக்கட்டின் முக்கியத்துவம் குறித்து உரைகள் இடம்பெற்றன.

6–7 ஜல்லிக்கட்டு மாடுகள் கொண்டு வரப்பட்டு, அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் வந்திருந்தோருக்கு விளக்கப்பட்டன.

மாடுகளின் மீதேறி அமருவது எப்படி என்பதை சிலர் நேரில் அனுபவிக்கவும் வாய்ப்பு பெற்றனர்.

ஜல்லிக்கட்டை வழி நடத்திய 5 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

உருமி இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் விழாவை மேலும் உற்சாகமாக்கின.

மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது குறித்து ராஜேந்திரன் மகிழ்ச்சித் தெரிவித்தார்.

தற்போது CSR சமூக நடவடிக்கையாக, பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களைத் தொழில்முனைவோர் ஆக்கும் திட்டத்தைத் தொடங்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

சமூகத்திற்கே திருப்பித் தரும் வகையிலான Enrico’s நிறுவனத்தின் இம்முயற்சி பாராட்டுக்குரியது எனக் கூறிய டத்தோ ராமசந்திரன், மற்ற நிறுவனங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Enrico’s நிறுவனத்தின் இந்த மாட்டுப் பொங்கல் விழா, தமிழர் பாரம்பரியத்தையும், ஒன்றுபட்ட சமூகத்தின் பெருமையையும் வெளிப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!