
பேங்கோக், செப்டம்பர்-27,
தாய்லாந்தில்
ஓடிக்கொண்டிருந்த பிக்கப் லாரியில் பெண்மணியுடன் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ வைரலானதால், 23 வயது ரஷ்ய இளைஞர் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
ஜியோர்ஜி என அடையாளம் கூறப்பட்ட அவர், நாட்டை விட்டு வெளியேற சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தில் முயன்றபோது பிடிபட்டார்.
15 வினாடி நீளமான அந்த வீடியோவில், 42 வயது தாய்லாந்து பெண்ணுடன் அந்நபர் நிர்வாணமாக பாலியல் செயலில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.
போலீஸார் நடத்திய விசாரணையில், 1,000 Baht பணம் கொடுத்து தன்னை அந்த ஆபாசக் காட்சிக்கு பயன்படுத்தியதாகவும், அது ரஷ்ய பார்வையாளர்களுக்காக படமெடுக்கப்பட்டதாகவும் அப்பெண் தெரிவித்தார்.
ஜியோர்ஜி ஓர் ஆபாச வீடியோ தயாரிப்பாளர் எனவும், அவர் மீது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும்போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இலாபம் ஈட்டியிருந்தால், இணையக் குற்றச்சாட்டு சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்.
அவரின் விசா இரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும், இனி தாய்லாந்து நுழைவில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கோபத்தை ஏற்படுத்தி, நாட்டின் புகழை காக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.