
புக்கெட், மார்ச்-12 – இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து தாய்லாந்தின் புக்கெட் புறப்பட்ட, Air India Express விமானம் நேற்று கடுமையான தரையிறக்கத்திற்கு ஆளானது.
புக்கெட் விமான நிலையத்தில் அந்த போயிங் 737 MAX 8 விமானத்தின் மூக்கு சக்கரம் சேதமடைந்து, ஓடுபாதையில் சிக்கியது.
எனினும் 133 பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்; எவருக்கும் காயம் எதுவும் இல்லை.
இதனால் புக்கெட் விமான நிலையம் சுமார் 6 மணி நேரம் மூடப்பட்டு, பல விமானங்கள் தாமதம் மற்றும் மாற்றம் கண்டன.
சம்பவத்திற்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.



