Latestமலேசியா

புதிய ஆண்டு வரவிருப்பதை முன்னிட்டு தலைநகர் சுற்றுவட்டார சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், டிசம்பர் 31 – நாளை புதிய ஆண்டு பிறக்கவிருப்பதை முன்னிட்டு இன்று மாலை வரை தலைநகர் மற்றும் பல மாநிலங்களில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மெதுவாக நகர்ந்து வருவதாக மலேசியா நெடுஞ்சாலை வாரியமான LLM தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் NKVE நெடுஞ்சாலையில் Bukit Lanjan முதல் Damansara பகுதிவரை நெரிசல் ஏற்பட்டுள்ளது. KESAS நெடுஞ்சாலையில் Kota Kemuning முதல் Seafield வரையிலும், Sunway பிளாசா டோல் முதல் கின்ராரா வரையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ELITE நெடுஞ்சாலையில் புத்ராஜெயா முதல் புத்ரா ஹைட்ஸ் வரையிலும், ஷா ஆலாம் முதல் Ebor சாலை வரையிலும் மற்றும் USJ முதல் புத்ரா ஹைட்ஸ் வரையிலும் நெரிசல் பதிவாகியுள்ளது.

NPE சாலையில் ஜாலான் டெம்ப்லர் முதல் பந்தாய் டாலாம் வரையிலும், LDP சாலையில் பூச்சோங் உத்தாமா, Puchong Intan, Puchong Industri முதல் பூச்சோங் ஜெயா, கெலானா ஜெயா முதல் டாமான்சாரா உத்தாமா போன்ற பகுதிகளில் வாகன ஓட்டம் மெதுவாக உள்ளது.

மேலும் SPRINT, SKVE மற்றும் DUKE நெடுஞ்சாலைகளிலும் அதே நிலை தொடர்கிறது என அறிக்கை கூறுகிறது.

தலைநகரத்திற்கு வெளியிலும் நெடுஞ்சாலை நெரிசல் கடுமையடைந்துள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் Jitra முதல் Kepala Batas வரை சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில வழித்தடங்கள் மூடப்பட்டு நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Kempas முதல் Pasir Gudang வரையிலும், Sungai Besi டோல் முதல் நகர மையம் வரையிலும், Kulai முதல் Senai வரையிலும் Tambak Johor மற்றும் Linkedua வழித்தடங்களிலும் போக்குவரத்து மெதுவாக உள்ளது.

இந்நிலையில் LLM, பயணிகள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, வேகவரம்பை கடைபிடித்து, வாகன பரிசோதனையை உறுதி செய்து, போதுமான ஓய்வு எடுத்த பிறகே பயணம் தொடங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!