
புத்ராஜெயா, ஜூலை 11 – மலேசியாவின் புதிய நீதித்துறை நியமன செயல்முறையை அனைத்து தரப்பினரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு அதற்கு ஒத்துழைப்பும் அளிக்க வேண்டுமென்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் நீதித்துறை நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கையைக் கோரி வருகின்ற ஜூலை 14 ஆம் தேதியன்று அமைதி பேரணி நடத்துவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
முக்கிய நீதித்துறை பதவிகளில் உள்ள காலியிடங்கள், நியமனங்களில் தாமதம் மற்றும் நடவடிக்கைகளில் தலையிடுவதற்கான குற்றச்சாட்டுகளை முன்னிட்டு இந்த அணிவகுப்பு நடக்க இருந்தாக நீதித்துறை நிறுவன தலைவர் முகமது எஸ்ரி அப்துல் வஹாப் கூறியதாக அறியப்படுகின்றது.
மேலும் நீதித்துறை நியமன முறையை மாற்ற விரும்பும் தரப்பினர்கள் அரசு விதிகளைப் பின்பற்றி செயல்பட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.