Latestமலேசியா

புதிய பொலிவுடனிருக்கும் கிள்ளான் பள்ளத்தாக்கு; ‘Mural’ வரைபடங்களால் நகரத்திற்கு கூடுதல் அழகு

கிள்ளான், டிசம்பர் 9 – கிள்ளான் மாநகராட்சி மன்றம் (MBDK) மற்றும் கிள்ளான் துறைமுக வாரியம் இணைந்து நடத்திய சுத்தம் மற்றும் அழகுபடுத்துதல் திட்டம் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதியன்று போர்ட் கிள்ளான் நகரில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

இந்நிகழ்வு கிள்ளான் நகரின் மாநகராட்சி மன்ற தலைவர் Datuk Abd Hamid Hussain, அவர்களால் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது.

‘Wake Up and Make Up Klang’ எனும் முயற்சியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல்பாட்டில் நகரத்தைச் சுத்தம் செய்தல் மற்றும் சுவர்களில் ‘Mural Art’ எனப்படும் சுவரோவியங்களை வரைதல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இந்நிலையில் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு ‘Mural’ சவரோவியங்களால் கூடுதல் அழகு சேர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

உள்ளூர் அமைப்புகளும் பொதுமக்களும் ஈடுப்பட்ட இந்த நடவடிக்கையில் சுத்தம், நிலைத்தன்மை மற்றும் கிள்ளானின் அடையாளம் குறிப்பாக கடல்சார் அடையாளத்தை மையமாக கொண்டு வரைபடங்கள் வரையப்பட்டன.

போர்ட்கிள்ளான் மற்றும் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயலாற்றிய நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் பங்களிப்புதான் இந்த திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என Datuk Abd Hamid குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!