
கோலாலாம்பூர், செப்டம்பர்-23,
பெரிக்காத்தான் நேஷனல் உண்மையிலேயே புத்ராஜெயாவைக் கைப்பற்ற விரும்பினால், அனைத்து மலேசியர்களின் முக்கியமான பிரச்னைகளுக்கும் அது முதலில் தெளிவான திட்டங்களை முன்வைக்க வேண்டும்.
உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr. பி. இராமசாமி அதனை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தல், இன-மத பிளவுகளை குறைத்தல், அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாத்தல், பொதுச் சேவையில் சீர்திருத்தம், திறமை மற்றும் தகுதி அடிப்படையிலான கல்வி வாய்ப்புகள், நியாயமான பொருளாதார வாய்ப்புகள் மற்றும் சபா-சரவாக்கின் உரிமைகளை மதித்தல் உள்ளிட்டவை, பெரிக்காத்தான் கவனம் செலுத்தியே ஆக வேண்டிய முக்கிய அம்சங்கள் என ராமசாமி பட்டியலிட்டார்.
இவ்வேளையில், பாஸ் தலைமையில் பெரிக்காத்தான் தேர்தலைச் சந்தித்தால், இஸ்லாமிய அடிப்படையிலான சித்தாந்தத்தைத் தாண்டி அனைத்து மலேசியர்களையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் மாதிரியை உருவாக்க முடியுமா என்றும் ராமசாமி கேள்வி எழுப்பினார்.
கொள்கைகள் என்பது வெறும் வாய் சவடாலாக இல்லாமல், சிறுபான்மையினரின் சவால்களுக்கும் உண்மையான தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
அதோடு சமச்சீரான தேசிய வளர்ச்சியை உறுதிச் செய்வதாக இருக்க வேண்டுமென, பினாங்கு முன்னாள் துணை முதலவருமான ராமசாடி சொன்னார்.