
மோஸ்கோவ், செப்டம்பர்-10 – உலகில் லட்சக்கணக்கானோரைப் பாதிக்கும் புற்றுநோய்க்கு தீர்வாக, ரஷ்யா உருவாக்கிய புதிய mRNA அல்லது ‘என்ட்ரோமிக்ஸ்’ தடுப்பூசி 100% செயல்திறனைக் காட்டியுள்ளது.
இத்தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அழித்துள்ளதை ரஷ்ய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியது.
முக்கியமாக, சோதனைகளில் கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் பதிவாகவில்லை என்பது மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்துள்ளது.
கோவிட்-19 தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இது, நோயாளியின் உடலில் ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தாமல் புற்றுநோய் செல்களை துல்லியமாகத் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புற்றுநோயியல் மையங்களில் ஆரம்பகட்ட மருத்துவப் பயன்பாட்டில் அத்தடுப்பூசி உள்ளது.
கடைசிக் கட்ட சோதனைகள் முடிந்ததும் இது பொது பயன்பாட்டுக்கு வரும்.
புற்றுநோயாளிகளுக்கு அத்தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும்; ஆனால், பொது மக்களுக்கு ஒரு நோய் தடுப்பாக வழங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லையென, ரஷ்ய அரசு ஏற்கனவே கூறியுறுள்ளது.