
ஈப்போ, ஜனவரி-22- பேராக், ஈப்போவில் உள்ள கம்போங் கோலாம் கிராமத்தில் புலி நடமாடுவதால், மக்கள் தூங்கா இரவுகளைச் சந்தித்து வருகின்றனர்.
ஜனவரி 17-ஆம் தேதி கிராமத்திற்குள் புகுந்து கால்நடைகளை புலி வேட்டையாடியுள்ளது.
தனது பிரதான உணவான காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளதால், அப்புலி உணவுத் தேடி கிராமத்திற்குள் புகுந்திருப்பதாகத் தெரிகிறது.
அப்பகுதியில் புலியின் கால் தடங்களும் கால்நடைகளின் உடல்களில் கடித்துக் குதறியக் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால் கடந்த சில தினங்களாகவே கிராம மக்கள் பீதியில் உறைந்துபோயிருக்கின்றனர்.
இந்நிலையில், புலியைப் பொறி வைத்துப் பிடிப்பதற்காக வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையின PERHILITAN அங்கு கூண்டுகளைப் பொருத்தியுள்ளது.
ஏற்கனவே புலியின் நடமாட்டத்தைக் கண்டறிய கேமராக்கள் பொருத்தப்பட்டன; ஆனால் புலி இந்த ஓரிரு தினங்களில் கிராமத்திற்குள் வரவில்லை போலும் என பேராக் PERHILITAN இயக்குநர் Yusoff Shariff கூறினார்.
விரைவிலேயே புலி சிக்குமென நம்பிக்கைத் தெரிவித்தவர், அதுவரை கால்நடைகள் கண்டபடி மேயாமலிருப்பதைப் பார்த்துக்கொள்ளுமாறு கிராம மக்களை கேட்டுக் கொண்டார்.