Latestஉலகம்

இந்தோனேசியாவில் லெவோடோபி எரிமலை குமுறும் அபாயம் வெளியேறும்படி மக்களுக்கு உத்தரவு

ஜகார்த்தா, பிப் 13 – Lewotobi எரிமலை குமுறும் எச்சரிக்கை அளவை அதன் அதிகபட்ச நிலைக்கு உயர்த்திய இந்தோனேசிய அதிகாரிகள் அரை டஜன் கிராமங்களைச் சேர்ந்த மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளனர். நவம்பர் மாதம் Flores சுற்றுலாத் தீவிலுள்ள Mount Lewotobi Laki -Laki எரிமலை பல முறை குமுறியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து பாலிக்கான அனைத்துலக விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டு பெரிய அளவில் சுற்றுப்பயணிகளை வெளியேற்றும் கட்டாயம் ஏற்பட்டது.

கண்காணிப்பு மற்றும் நில அதிர்வு செயல்பாடுகளின் முடிவுகள் மூலம் எரிமலை குமுறக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதை காட்டுவதாக இந்தோனேசியா புவியியல் அமைப்பின் தலைவர் முஹம்மது வாஃபிட் Muhammad Wafid ஒரு அறிக்கையில் தெரிவித்தார். எதிர்காலத்தில் எரிமலை குமுறும் சாத்தியம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!