
செர்டாங், ஜன 9- பூச்சோங், பண்டார் புத்ரியில் ஒரு லோரியின் பிரேக் செயல் இழந்ததைத் தொடர்ந்து அந்த லோரி ஏழு கார்களை மோதியது.
நேற்று மதியம் மணி 1.44 அளவில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அவசர அழைப்பின் மூலம் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் பாரிட்
அகமட் ( Muhamad Farid Ahmad ) தெரிவித்தார்.
கட்டுமான பகுதியிலிருந்து வெளியேறிய அந்த லோரி Pusat Bandar பூச்சோங்கை நோக்கிக் சென்றபோது பிரேக் செயல்படாததால் கட்டுப்பாட்டை இழந்தது என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.
அப்போது அந்த லோரி சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு கார்களையும் அருகேயுள்ள கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்திலிருந்த இதர ஐந்து கார்களையும் மோதியது.
பாதிக்கப்பட்ட அனைத்து கார் ஓட்டுனர்களும் இச்சம்பவம் தொடர்பில் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் எந்தவொரு ஆருடங்களையும் தெரிவிக்க வேண்டாம் என பொதுமக்களை Muhamad Farid கேட்டுக்கொண்டார்.



