Latestமலேசியா

பூச்சோங் வீடமைப்பு பகுதிக்கு அருகே 67 வயது ஆடவர் இறந்து கிடந்தார்.

செப்பாங் , மார்ச் 10-பூச்சோங் ,Taman Putra Perdanaவில் Taman La Cottageக்கு
அருகே நேற்று 67 வயது ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

இது குறித்த தகவல் திங்கட்கிழமையன்று போலீசிற்கு கிடைத்ததாக செப்பாங் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் நோர்ஹிசாம் பஹாமான் ( Norhizman Bahaman) தெரிவித்தார்.

அந்த ஆடவர் பழைய பொருட்களை சேகரிக்க தனது வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் பின்னர் தனது வாகனத்தின் அருகே கிடந்ததை பொதுமக்களில் ஒருவர் கண்டுபிடித்தததாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

விசாரணையில் அவரது மரணத்தில் எந்த தவறும் நடந்ததற்கான அறிகுறிகளும் இல்லை, மேலும் இந்த விவகாரம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நோர்ஹிசாம் வெளியிட்ட அறிக்கையில் விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!