Latestமலேசியா

பூட்டப்பட்டிருந்த காருக்குள் ஆடவர் இறந்து கிடந்தார்

தாசேக் குளுக்கோர், ஜூலை 17- பினாங்கு, Tasek Gelugor Taman Ara Mutiaraவில் ஒரு கடையின் பின்புறம் பூட்டப்பட்டிருந்த காரில் 34 வயதுடைய ஆடவர் ஒருவர் இறந்துகிடந்தார்.

தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் சென்று கண்டபோது Mazda CX 5 காரில் இயந்திரம் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில் அதன் ஓட்டுனர் சுயநினைவின்றி இருந்தார்.

போலீஸ் உதவியோடு தீயணைப்பு வீரர்கள் சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி அக்காரின் கதவை திறந்துபார்த்தபோது அந்த ஆடவர் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவுக்கான உதவி இயக்குனர் John Sagun Francis வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!