Latestமலேசியா

பெசூட்டில் கைவிடப்பட்ட கழிவறையில் ஆடவரின் அழுகிப் போன சடலம் கண்டெடுப்பு

பெசூட், மார்ச்-3 – திரங்கானு பெசூட்டில், கைவிடப்பட்ட கழிவறையில் அழுகிப் போன ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புக்கிட் கெளுவாங்கில் நேற்று மாலை 4 மணியளவில் பொது மக்களால் அது கண்டெடுக்கப்பட்டது.

சடலத்துடன் அடையாள ஆவணங்கள் எதுவும் காணப்படவில்லை;

என்றாலும், சம்பவ இடத்தில் ஒவ்வொரு நாள் காலையும் காணப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவரே, இறந்துபோனவர் என நம்பப்படுகிறது.

ஒரு வாரமாக அவரை அங்குக் காணவில்லை என சாட்சிகள் மூலம் கண்டறியப்பட்டதாக, பெசூட் மாவட்ட போலீஸ் இடைக்காலத் தலைவர் துணை ஆணையர் Md Sani Md Saleh கூறினார்.

இறந்தவரின் அண்ணன் என நம்பப்படும் இன்னொரு சாட்சியை விசாரித்ததில், தம்பி ஒரு வாரத்திற்கு மேலாக வீடு திரும்பவில்லை என்றார்.

ஆனால் அது குறித்து போலீஸ் புகார் எதுவும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், சவப்பரிசோதனைக்காக சடலம் பெசூட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!