கோலாலம்பூர், நவ 20 – பெட்டாலிங் ஜெயாவில் அடுக்கத்தின் 15 ஆவது மாடியிலிருந்து விழுந்த ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8.15 அளவில் பால்ம் ஸ்பிரிங் ( Palm Spring Condominium) அடுக்ககத்தில் இந்த சம்பவம் நடந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஷாருல்நிஷாம் ஜாபர் ( Sharulnizam Jaa’far ) தெரிவித்தார்.
15ஆவது மாடியிலிருந்து விழுந்த 56 வயதுடைய அந்த ஆடவரின் உடல் கீழ் தளத்தில் காணப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அவர் மரணம் அடைந்ததாக சுங்கை பூலோ மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவரது மரணம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதோடு இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஷாருல்நிஷாம் கூறினார்.