பெட்டாலிங் ஜெயா, மே 2 – பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் தெரு நாய்கள் சில பள்ளி மாணவன் ஒருவரை பயங்கரமாகத் துரத்தும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, காலை 7.18 மணிக்கு அந்த மாணவர் தனியாக பள்ளி நுழைவாயிலை நோக்கி, வடிகாலை கடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று, தெரு நாய்கள் சில ஒன்றிணைந்து அவரை தாக்கத் தயாராகியதை, உணர்ந்த அந்த மாணவர் உடனடியாக உதவிக் கேட்டுக் கத்திக்கொண்டே வேகமாக ஓடும் காட்சிகள் சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளன.
அதிர்ஷ்டவசமாக அவ்வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தலையிட்டு, மோட்டாரை முறுக்கி அதன் சத்தம் மூலமாக நாய்களை பயமுறுத்தி, அம்மாணவரை காப்பாற்றினர்.
இதனிடையே, அந்த காணொளியில், மாணவர் அழுது கொண்டு ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளவாசிகள் மனதை உலுக்கியது மட்டுமல்லாது இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.