பெட்ரோனாஸ் கோபுரம் முதல் புக்கிட் பிந்தாங் வரை; Monopoly பலகை விளையாட்டு இப்போது கோலாலம்பூர் பதிப்பில்

செப்பாங், டிசம்பர்-3,
உலகப் புகழ்பெற்ற பலகை விளையாட்டுகளில் ஒன்றான Monopoly தற்போது மலேசிய பாணிக்கும் மாறியுள்ளது…
வீரர்கள் சொத்துக்களை வாங்கி, வாடகை வசூலித்து மற்றவர்களை திவாலாக்கி ஒரு ஏகபோக நிலையை அடைவதே இந்த Monopoly விளையாட்டாகும்.
தற்போது இது கோலாலம்பூர் பதிப்பில் வெளியாகியுள்ளது.
அதாவது பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம், டத்தாரான் மெர்டேக்கா, புக்கிட் பிந்தாங், கம்போங் பாரு, சைனா டவுன், லிட்டில் இந்தியா, பங்சார் போன்ற முக்கிய இடங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
விளையாட்டில் உள்ள அட்டைகள் மலேசியாவின் பல தனித்துவ அடையாளங்களை அடக்கியுள்ளன.
நாசி லெமாக் மற்றும் லக்சாவுக்கு RM50 செலுத்துவது முதல், பருவமழைக்குப் பிறகு சொத்துக்களில் ஏற்படும் பொதுவான பழுதுபார்ப்புச் செலவை ஈடுகட்டுவது அல்லது KLIA-வில் விடுமுறை விமானத்தைப் பிடிப்பது வரையிலான கட்டளைகளுடன்…
இது குடும்பங்களை இணைக்கும் விதமாகவும், குறிப்பாக ‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டில்’ கோலாலம்பூரின் கலாச்சாரத்தை சுற்றுப் பயணிகளிடையே பிரபலப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என, நேற்றைய அதன் அறிமுக விழாவில் Tourism Malaysia இயக்குநர் டத்தோ Dr P. மனோகரன் தெரிவித்தார்.
இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில் 28.2 மில்லியன் சுற்றுப் பயணிகள் மலேசியா வந்துள்ளனர்.
ஆண்டிறுதியில் 40 மில்லியன் இலக்கை அடைய அரசாங்கம் விரும்புகிறது.



