Latestமலேசியா

‘கோப்பிதியாம்’ புகழ் நடிகர் மனோ மணியம் 79 வயதில் மறைவு

கோலாலம்பூர், மே-31 – ‘கோப்பிதியாம்’ தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர் புகழ் நடிகர் மனோ மணியம் தனது 79-ஆவது வயதில் காலமானார்.

அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்த மனோ மணியம் நேற்றிரவு காலமானதாக, அவரின் சகோதரர் மாடி மணியம் தெரிவித்தார்.

வயது மூப்பு அல்லது மாரடைப்பால் அவர் இறந்திருக்கக் கூடும்; எதுவும் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை என்றார் அவர்.

இறுதிச் சடங்கு உள்ளிட்ட விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என அவர் சொன்னார்.

நடிகர், இயக்குநர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், பின்னணி குரல் கலைஞர் என பன்முகம் கொண்டவரான மனோ மணியம், ‘கோப்பிதியாம்’ நாடகம் வழி மலேசிய மக்கள் மத்தியில் புகழின் உச்சிக்குக் சென்றார்.

அதில் அவர் ஏற்றிருந்த ‘Uncle Chan’ கதாபாத்திரம் அவரை அனைத்து மலேசிய மக்கள் வீடுகளிலும் கொண்டு சேர்த்தது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!