Latestமலேசியா

சனிக்கிழமை முதல் KTM பயணிகள், ETS அட்டவணைகள் தற்காலிக மாற்றங்களுக்கு உட்படும்

கோலாலாம்பூர், மே-28 – கெப்போங் மற்றும் சாலாக் செலாத்தான் வழித்தடத்தில் வரும் சனிக்கிழமை தொடங்கி 3 நாட்களுக்கு சமிக்ஞை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

இதனால் கிள்ளான் பள்ளத்தாக்கில் KTM Komuter ரயில் சேவையும் ETS இரயில் சேவையும் தற்காலிக அட்டவணை மாற்றத்தை சந்திக்குமென, KTMB நிறுவனம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

அவ்வகையில், Pulau Sebang–Batu Caves–Pulau Sebang மற்றும் Tanjung Malim–KL Sentral–Tanjung Malim ஆகிய Komuter இரயில் வழித்தடங்களுக்கான சேவைகளில் 50 நிமிடங்களுக்கு தாமதம் ஏற்படலாம்.

இவ்வேளையில் சனிக்கிழமைக்கான ETS இரயில் சேவை மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Padang Besar–Segamat மற்றும் Butterworth–Segamat வரைக்குமான பயணங்களுக்கான பிளாட்ஃபோம் மாற்றங்கள், KL Sentral மற்றும் Kuala Lumpur இரயில் நிலையங்களை உட்படுத்தியிருக்கும்.

ETS தாமதம் குறித்து பயணிகளுக்கு SMS வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.

எந்தவொரு சூழலிலும் பயணிகளுக்கு உதவ இரயில் நிலையங்களில் பணியாளர்கள் தயாராக இருப்பர்.

தவிர, பயணிகளும் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதோடு, KTMB செயலியில் MyRailtime நிகழ்நேர வசதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த தற்காலிக சேவைத் தடங்கலானது, இரயில் போக்குவரத்தின் பாதுகாப்பையும் அது ஆக்கப்பூர்வ சேவையை வழங்குவதை உறுதிச் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என KTMB விளக்கியது.

அண்மைய ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது ஏராளமானோர் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தியதால், இந்த தரமுயர்த்தும் பணிகள் முன்னதாக ஒத்தி வைக்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!