
கோலாலம்பூர், பிப் 28 – மொத்தம் 14 வகையான அறிவிக்கப்படாத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய ஒரு வகை விஷம் ஆகியவை நேற்று Beraவிலுள்ள வர்த்தக வளாகத்தில் `Ops Snow’ நடவடிக்கையின்போது பஹாங் சுகாதாரத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
திட்டமிடப்பட்ட இந்த விஷமானது 99 விழுக்காடு டிரானெக்ஸாமிக் (tranexamic ) அமில வகையாகும்.
இது பொதுமக்களுக்கு விற்கப்படுவதற்கு முன்பு அழகுசாதனப் பொருட்களில் கலப்பதற்காக தயாரிக்கப்பட்டதாகும் என பஹாங் சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் டாக்டர் வான் அப்துல் ரஹிம் வான் முகமட் தெரிவித்தார்.
மின் வர்த்தக தளம் மூலம் அறிவிக்கப்படாத அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக பகாங் மருந்தக அமலாக்கப் பிரிவுக்கு கிடைத்த பொதுப் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆன்லைனில் அறிவிக்கப்படாத அழகுசாதனப் பொருட்களை தீவிரமாக விற்பனை செய்வதாகக் கண்டறியப்பட்ட உளவுத் தகவல் மூலம் சந்தேக நபரின் செயல்பாடுகளை கண்டறிய முடிந்தது.
அறிவிக்கப்படாத அழகுசாதனப் பொருட்களின் விற்பனையானது, 1984ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தின் 18A(1) (a) விதிகளை மீறுவதாகும் .
இது 1952 ஆம் ஆண்டின் மருந்து விற்பனைச் சட்டத்தின் 12(1)ன் விதியின் கீழ் தண்டனைக்குரியதாகும் என டாக்டர் வான் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.