
கோலாலம்பூர், ஜனவரி-28-நாளை நடைபெறவிருந்த பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, பெர்சாத்து, பாஸ், கெராக்கான், MIPP ஆகிய 4 உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் இல்லத்தில் சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பு, கூட்டணியின் எதிர்கால திசையைத் தீர்மானிப்பதற்கும், ஜனவரி 1 முதல் அமுலுக்கு வந்த முஹிடினின் பதவி விலகலுக்குப் பிறகு கூட்டணிக்குப் புதிய தலைவரை நியமிப்பதற்குமான முன்னேற்பாடாகும்.
MIPP தலைவர் பி.புனிதன் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
தலைவர்கள் இடையிலான இந்த கலந்துரையாடலுக்குப் பின், பெரிக்காத்தான் உச்சமன்ற அதிகாரப்பூர்வமாகக் கூடும்.
அப்போது, பாஸ் கட்சி முறைப்படி பெரிக்காத்தான் தலைமைத்துவத்தை ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



