அலோர் ஸ்டார், செப்டம்பர்-18 – பெரிய அலைகள் காரணமாக, லங்காவியிலிருந்து குவாலா கெடாவுக்கும், குவாலா கெடாவிலிருந்து லங்காவிக்குமான 8 ஃபெரி படகுச் சேவைகள் இன்று இரத்துச் செய்யப்பட்டன.
அவற்றில் 5 ஃபெரிகள், லங்காவியிலிருந்து குவாலா கெடாவுக்கு மொத்தமாக 2,013 பயணிகளை ஏற்றிச் சென்றிருக்க வேண்டியவையாகும்.
ஏனைய 3 படகுகளும் குவாலா கெடாவிலிருந்து லங்காவிக்கு மொத்தமாக 937 பேரை ஏற்றிச் சென்றிருக்க வேண்டும்.
குவாலா பெர்லிஸ் பயணிகள் முனையத்தில் ஏற்கனவே நெரிசல் நிலவுவதால், மேற்கண்ட 8 பயணங்களையும் அங்கு திருப்பி விட முடியவில்லை என Konsortium Ferrylines Ventures Sdn Bhd நிறுவனத்தின் கேப்டன் Dr Baharin Baharom தெரிவித்தார்.
எனவே, லங்காவியிலிருந்து குவாலா கெடா செல்ல வேண்டியவர்களும், குவாலா கெடாவிலிருந்து லங்காவி செல்ல வேண்டியவர்களும் நாளை வரை காத்திருக்க வேண்டும்.
நாளை வானிலை சீரடைந்ததும், இரத்துச் செய்யப்பட்ட ஃபெரி பயணங்கள் மறுஅட்டவணையிடப்படும் என Baharom கூறினார்.