
கோலாலாம்பூர், அக்டோபர்-3,
வணக்கம் மலேசியா பெருமையுடன் நடத்தி வரும் மாணவர் முழக்கம், தமிழ்ப்பள்ளிகளுக்கான பேச்சுப் போட்டி இவ்வாண்டு தனது 13-ஆவது ஆண்டை எட்டியுள்ளது.
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டி, மாணவர்களின் மொழித்திறன், சிந்தனை ஆற்றல், மற்றும் பேச்சுத் திறமையை வெளிக்கொணரும் சிறந்த மேடையாக திகழ்வதோடு உள்நாடு மற்றும் அனைத்துலக அரங்கில் நமது மலேசிய தமிழ்ப்பள்ளி மாணவர்களை வாகை சூடும் அளவிற்கு கொண்டுச் சென்றுள்ளது.
அந்த வகையில் கடந்தாண்டுகளைப் போலவே இவ்வாண்டு போட்டிக்கும் பள்ளிகள் மற்றும் மாணவர்களிடமிருந்து அமோக வரவேற்புக் கிடைத்து
நாட்டின் பல மாநிலங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகத்தோடு தங்கள் காணொளிகளை அடிப்படை தேர்வுச் சுற்றுக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் நாவன்மையுடன் திகழ்ந்து, தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்திய 50 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.
காலிறுதி, அரையிறுதி, மற்றும் இறுதி என மூன்று கட்டங்களாக நடைபெறும் இப்போட்டிக்கு வழக்கறிஞரும் தமிழ் ஆர்வளரான கனல்வீரன், மற்றும் UKM பல்கலைக்கழக குற்றவியல் துறைத் தலைவரான முனைவர் ரஹிம் இருவரும் நடுவர்களாக மீண்டும் இவ்வாண்டு பணியாற்றுகின்றனர்.
இவ்வாண்டு மேலுமொரு தரமான மற்றும் நெருப்பான மாணவர்களின் படைப்பை கண்டுகளிப்போம் வாருங்கள்.