
கோலாலாம்பூர், அக்டோபர்-28,
விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
மலிவு விமான சேவைகளுக்குப் பெயர்பெற்ற ஏர்ஏசியா X (AirAsia X), தனது 18-ஆம் ஆண்டு விழாவை சிறப்பு பிறந்தநாள் சலுகையுடன் கொண்டாடுகிறது.
2007-ஆம் ஆண்டு தொடங்கிய ஏர்ஏசியா X, இதுவரை 5 கோடி பயணிகளுக்கு மேல் சேவை வழங்கி, ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட 21 தூரப்பயண இலக்குகளுக்குப் பறந்துள்ளது.
இந்த பிறந்தநாள் சலுகையின் கீழ், விமான கட்டணங்கள் வெறும் RM338 ரிங்கிட்டிலிருந்து தொடங்குகின்றன;
அதோடு, உணவு, பயணக் காப்பீடு, இருக்கை தேர்வு போன்றவற்றை உள்ளடக்கிய “Value Pack” முன்பதிவுச் சலுகையில், கூடுதலாக 18 விழுக்காடு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
தைப்பே, தோக்யோ, சிட்னி, சியோல், இஸ்தான்புல் போன்ற பிரபல இடங்கள் இதில் அடங்குகின்றன.
பயணம் 2026 நவம்பர் 30 வரை செல்லுபடியாகும்; சலுகை இப்போது முதல் வரும் நவம்பர் 2 வரை வழங்கப்படும்.
மலிவு விலையில் தூரம் பறக்க விரும்பினால், இதுவே சரியான நேரம்!
airasia.com அல்லது AirAsia MOVE செயலியில் உடனே முன்பதிவு செய்யுங்கள்.



