
கோலாலம்பூர், அக் 14 –
தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான் ( Wan Siful Wan Jan) பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வேளையில் மாச்சாங் நாடாளுமன்ற உறப்பினர் வான் அகமட் பேசால் வான் அகமட் 5 ஆண்டு காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிவு கூடிய கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் மேலும் நான்கு உறுப்பினர்களையும் நீக்கியதாக பெர்சத்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்து.
கட்சியின் 9.1.4 ஆவது விதிமுறை, உறுப்பினர்களின் நெறிமுறைகள் மற்றும் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆறு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை வாரியம் அறிவித்துள்ளது.
கட்சி உறுப்பினர்கள் நடத்தை விதிகளை மீறியதைத் தொடர்ந்து, பிரதிவாதிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை வாரியம் உறுப்பினர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ புகாரைப் பெற்றது.
அப்புகாரை விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கை வாரியம் நடவடிக்கை எடுத்து, அக்டோபர் 8 ஆம் தேதி விசாரணை நடத்திய பின் பிரதிவாதியை அழைத்து விளக்கம் பெற்றதோடு , கட்சியின் விதிமுறைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் 14 நாட்களுக்குள் கட்சியின் மேல்முறையீட்டு வாரியத்தில் முறையீடு செய்ய முடியும்.