
கோலாலம்பூர் , செப் 2- பெர்சத்து தலைவர் c யாசின் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், கட்சியை தீவிரமாக வழிநடத்தி வருவதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் Azmin Ali இன்று தெரிவித்தார்.
இந்த வார இறுதியில் கட்சியின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக, முஹிடினுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாக அஸ்மின் கூறினார்.
அவர் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிலாங்கூர் பெர்சத்துவின் முன்னாள் செயலாளர் ஹஸ்னிசாம் ஆதாம் ( Hasnizam adham ) கடந்த வாரம் வெளியிட்ட Facebook பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக அஸ்மின் இதனைத் தெரிவித்தார்.
16வது பொதுத் தேர்தலுக்காக கட்சியின் தயார் நிலையில் ஒரு பகுதியாக, கடந்த ஆறு மாதங்களாக முஹிடின் மாநிலங்கள் மற்றும் டிவிசன் உறுப்பினர்களைப் சந்தித்து வருவதாகவும் அஸ்மின் கூறினார்.
முஹிடின் உடல்நிலை நன்றாக உள்ளதோடு அவர் சுறுசுறுப்பாக இருக்கிறார். உண்மையில், அவர் தற்போது பொதுப் பேரவைக்கு ஒரு விரிவான முக்கிய உரையைத் தயாரித்து வருகிறார்.
இம்மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் ஷா அலாம் IDCC மாநாட்டு மையத்தில் நடைபெறும். பெர்சத்து பொதுப் பேரவை 16ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராகுவதில் கவனம் செலுத்தும் என அஸ்மின் கூறினார்.