
கோலாலம்பூர், ஜனவரி-7,
பஹாங், இந்திரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைஃபுடின் அப்துல்லா, பெர்சாத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
பெர்சாத்து கட்டொழுங்கு நடவடிக்கை வாரியத்தின் கடிதம் நேற்று மாலை தமக்குக் கிடைக்கப் பெற்றதை, கட்சியின் உச்சமன்ற உறுப்பினருமான அவர் உறுதிப்படுத்தினார்.
கட்சி விதிகளை மீறியதாகக் கூறி அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; எனினும் அவர் என்ன தவறு செய்தார் என்பது அக்கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், அம்முடிவை எதிர்த்து சைஃபுடின் மேல்முறையீடு செய்யவுள்ளார்.
முன்னதாக, பஹாங் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருந்தார்.
கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசினின் தலைமைத்துவத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி, கடந்த சில மாதங்களாகவே சைஃபுடின் வெளிப்படையாகவே கருத்துகளைக் கூறி வந்தவர் ஆவார்.



