Latestமலேசியா

பெர்லிஸ் மாநில ‘மந்திரி பெசார்’ பதவி: PAS வேட்பாளர் பட்டியல் சமர்ப்பிப்பு – அரசரின் முடிவில் புதிய நியமனம்

பெர்லிஸ், டிசம்பர் 26 – பெர்லிஸ் மாநில மந்திரி பெசார் பதவிக்கான வேட்பாளர்கள் பெயர் பட்டியலை அதன் கட்சி அதிகாரப்பூர்வமாக பெர்லிஸ் அரசருக்கு சமர்ப்பித்துள்ளது என்று PAS கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந்தப் பட்டியலில் உள்ள நபர்களின் பெயர்களை தற்போது வெளியிட முடியாது என்று அவர் கூறினார். மேலும், பெர்லிஸில் PAS-க்கு ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், பொருத்தமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், தேவையானால் இடைத்தேர்தல் அல்லது மாநிலத் தேர்தல் எதிர்கொள்ளவும் PAS தயாராக இருப்பதாகவும் ஹாடி அவாங் குறிப்பிட்டார்.

இது அனைத்தும் பெர்லிஸ் மந்திரி பெசாராக இருந்து வந்த ஷுக்ரி ரம்லி நேற்று பதவி விலகியதைத் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. மூன்று ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்து வந்த ஷுக்ரி, உடல்நலம் காரணமாக விலகுவதாக அறிவித்தார். அவரது பதவி விலகலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக எட்டு பெரிக்காத்தான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் அதாவது திரும்ப பெற்றனர்.

இதில் PAS-இல் இருந்து நீக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து இருந்தனர். இதன் காரணமாக, 15 உறுப்பினர்கள் கொண்ட பெர்லிஸ் சட்டமன்றத்தில் அவருக்கு PAS-இன் ஆறு பேரின் ஆதரவு மட்டுமே இருப்பதால், அவர் பெரும்பான்மையை இழந்துள்ளார்.

புதிய மந்திரி பெசார் யார் என்பதற்கான இறுதி முடிவு பெர்லிஸ் அரசரின் மறு பரிசீலனைக்குப் பிறகு அறிவிக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!