
கோலாலம்பூர், பிப்ரவரி 4 – கடந்த ஜனவரி 29 ஆம் தேதியன்று வியட்நாமிலிருந்து Bangkok-குச் சென்ற A320 ஏர் ஏசியா விமானத்தில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு பயணி உடைகளை அகற்றி கலவரம் ஏற்படுத்திய சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் தரையிறங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், அந்தப் பயணி பதற்றமடைந்து விமானத்தில் ரஷ்ய மொழியில் முதலில் கூச்சலிட்டார். பின்னர், அவர் உடைகளை அகற்றி உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் விமானத்திலிருந்து இறங்க வேண்டும் என அடம் பிடித்தார்.
விமானம் தரையிறங்கியதும், பயணிகள் படிக்கட்டுகளில் இறங்கும் போது அவர் கீழே விழுந்து காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து, விமான நிலைய தரைப்பகுதியில் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்கவும் முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் அதிகாரிகள் அந்தப் பயணியை உடனடியாக கைது செய்தனர். பின்னர் விமானப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்தல் மற்றும் விமான பணியாளர்களின் உத்தரவை மீறி குழப்பம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.



