Latestமலேசியா

‘பேய் பிடிப்பதற்காக’ கட்டடத்தில் அத்துமீறல்; பத்து பஹாட் இளைஞனுக்கு 3 மாத சிறை

பத்து பஹாட், டிசம்பர்-26 – ஜோகூர், பத்து பஹாட்டில் அமானுஷ்ய சடங்குகளைச் செய்வதற்காக ஊரார் வீட்டு கட்டடத்தில் அத்துமீறியதை, கார் கழுவும் கடைப் பணியாளர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து 24 வயது Muhammad Haikal Mesrol எனும் அவ்விளைஞனுக்கு மேஜிஸ்திரேட் நீதிமன்றம் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

டிசம்பர் 21-ஆம் தேதி பத்து பஹாட், புக்கிட் பாசீரில் 66 வயது நிர்வாகிக்குச் சொந்தமான கைவிடப்பட்ட கட்டடத்தில் அந்நபர் அத்துமீறியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

இதையடுத்து அதிகபட்சம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 447-வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

எனினும், கைதான தேதியான டிசம்பர் 21 தொடங்கி அவ்விளைஞனுக்கு 3 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!