Latestமலேசியா

பேரங்காடியில் 39 ரிங்கிட் சாக்லேட் திருடியதாக சந்தேகிக்கப்படும் ஆடவன் கைது

அம்பாங் ஜெயா – ஆகஸ்ட் 12 – Spectrum Ampang கில் உள்ள பேரங்காடியில் 39 ரிங்கிட் மதிப்புள்ள சாக்லேட்டை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். இன்று நண்பகல் 12.30 மணியளவில் நடந்த இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ரோந்து காரைச் சேர்ந்த போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் அவர்கள் உடடினயாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு 39 வயதுடைய உள்நாட்டு ஆடவன் ஒருவனையும் புகார் தாரரையும் சந்தித்தபோது அந்த சந்தேகப் பேர்வழி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் அசாம் இஸ்மாயில் ( Mohd Azam Ismail) தெரிவித்தார். அந்த சந்தேகப் பேர்வழியிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் திருடப்பட்ட சாக்லேட் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த ஆடவன் தண்டனைச் சட்டத்தின் 380 ஆவது விதியின் கீழ் விசாரணைக்காக அம்பாங் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முகமட் அசாம் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!