
கோலாலம்பூர், ஜூலை 10 – பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் முகத்தையும் குரலையும் காண்பிக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு போலி வீடியோ கணக்கை முகநூலில் RPO எனப்படும் ஜோகூர் அரச குடும்ப ஊடக மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம் கண்டறிந்துள்து.
இது இன்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு லாபத்தை உறுதியளிக்கும் முதலீடு சலுகையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரது குரலைக் கொண்ட முகநூல் வழியாக இந்த காணொளி பரப்பப்பட்டது.
இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதோடு , முகநூல் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் மோசடி கும்பல்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இதுபோன்ற போலி கணக்குகளால் எளிதில் பாதிக்கப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆள்மாறாட்டம் மற்றும் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவது சட்டப்பூர்வ குற்றங்கள் என்பதோடு சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜோகூர் அரச குடும்ப ஊடக மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.