
சிரம்பான், நவ 25- பேராசிரியர் டாக்டர் சத்திய சீலன் கைவண்ணத்தில் உருவான மனதைத்திற – மாற்றம் வரும் என்ற நூல் வெளியிட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சன்சைன் கல்வி குழுமத்தின் ( SUNSHINE EDUCATIONAL GROUP) நிருவனர் மற்றும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஆர்.வி ஷாம் பிரசாத் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கி அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.
ஊன் உருக்கு, உள் ஒளி பெருக்கு, மெய் பதம் தேடு” எனும் ஆழமான வாழ்வியல் நெறிகளையும் , மனதை எப்படி பக்குவப்படுத்துவது, நெறிப்படுத்துவது போன்ற விவகாரங்களை மிகவும் எளிமையோடு படிப்பவர்களை கவரும் வகையில் பேராசிரியர் சத்திய சீலன் இந்நூலை எழுதியிருப்பதை ஷாம் பிரசாத் சுட்டிக்காட்டினார்
நெகிரி மாநிலத்தில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு வழங்குவதற்காகவும் சில புத்தகங்களை ஷாம் பிரசாத் வாங்கினார்.
பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு செயல் அதிகாரி சண்முகம் மூக்கன், நெகிரி மாநிலத்தின் முன்னாள் துணை சபாநாயகர் டத்தோ ரவி, டத்தோ கோபாலகிருஷ்ணன் உட்பட பல பிரமுகர்களும் எழுத்தாளர்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக கலந்து சிறப்பித்தனர்.



