பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்; ஆயிரக்கணக்கான மலேசிய-சிங்கப்பூர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்

ஜோகூர் பாரு, ஜூலை 21 – இன்று காலையில், 100 பேருந்து ஓட்டுநர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால், சிங்கப்பூர் பேருந்தில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான மலேசிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இச்சூழலினால், பங்குனான் சுல்தான் இஸ்கண்டார் (BSI) மற்றும் பல முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து மலேசியர்கள் சிங்கப்பூர் செல்ல முடியாமல் தவித்து நின்றனர்.
பயணிகளில் சிலர் கிட்டத்தட்ட அரை மணி நேர காத்திருப்புக்குப் பிறகு BSI-யிலிருந்து ஜோகூர் காஸ்வே வழியாக சிங்கப்பூருக்கு நடந்து செல்ல முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பேருந்து நிறுவனம் செய்த புதிய சம்பள மாற்றத்தில் பேருந்து ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்ததே இப்போராட்டத்திற்கு முக்கிய காரணமென்று அறியப்பட்டுள்ளது.
முன்னதாக, சிங்கப்பூருக்குச் செல்லும் பேருந்து ஓட்டுநர்கள் சம்பளப் பிரச்சினையைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, தொழிலாளர்களில் பலர் வேலைக்கு தாமதமாக செல்ல நேரிட்டது சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.