Latestமலேசியா

பொதுத் தேர்தலில் 115 இடங்களில் போட்டியிட BN இலக்கு; ம.இ.கா வரவேற்பு

கோலாலாம்பூர், மார்ச்-16-16-ஆவது பொதுத் தேர்தலில் 115 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி போட்டியிட இலக்கு வைத்திருப்பதை, ம.இ.காவின் தேசிய வியூக இயக்குநர் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் வரவேற்றுள்ளார்.

பொதுத் தேர்தலுக்குப் பிறகு புத்ராஜெயாவில் அமையப் போகும் அரசுக்கு BN தலைமையேற்க வேண்டும் என்ற இலக்கோடு அது ஒத்துப்போவதாக, ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினருமான அவர் சொன்னார்.

எனவே, தேசிய முன்னனி உடனடியாக ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க வேண்டும்;

இது, மக்கள் நம்பிக்கையைப் பெறவும், அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றியை நோக்கி முன்னேறவும் முக்கியப் படியாக இருக்கும் என சிவராஜ் கூறினார்.

நேரம் பொன்னானது என்பதால், BN உடனடியாக தேர்தல் வேலைகளைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த பொதுத் தேர்தலில் வெறும் 30 தொகுதிகளை மட்டுமே வென்றதால், தேசிய முன்னணி ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் ஒத்துழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!