Latestமலேசியா

பொதுத் தேர்தலுக்காக PACABA திட்டத்தின் கீழ் 10,000 அதிகாரிகளை ம.இ.கா தயார்படுத்தும் – சிவராஜ்

கோலாலம்பூர், டிச 8 – பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பு மையம், வாக்கு எண்ணிக்கை அதிகாரி ,தேர்தல் சாவடியில் மொத்த வாக்குகள் சரிபார்க்கப்பட்டு அவற்றை வாக்களிப்பு மையத்திற்கு கொண்டுச் செல்லப்படும் அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு நாடு முழுவதிலும் சுமார் 10,000 தேர்தல் பணியாளர்களை ம.இ.கா தயார்படுத்தவுள்ளது.

ம.இ.காவின் இந்த திட்டத்தின் கீழ் தேர்தல் விதிமுறைகள், வாக்குச் சாவடிகளில் அவர்களின் பொறுப்புகள் மற்றும் வாக்குச் சாவடி நாளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றை முழுமையாக தெரிந்துகொண்டு , நடைமுறையை பின்பற்றக்கூடிய வகையில் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி வாராந்திர தொடர்ச்சியாக திட்டமாக நடத்தப்படும். ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரனின் உத்தரவுகள் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, நாடு முழுவதும் 10,000 உறுப்பினர்களை PACABA அதிகாரிகளாகப் பயிற்றுவிக்க கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த நடவடிக்கை, வாக்குச் சாவடிகளில் தொழில் ரீதியாகவும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படியும் அதன் கடமைகளைச் செய்வதற்கு மஇகா போதுமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட திறனைக் கொண்டுள்ளது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என ம.இ.காவின் வியூக இயக்குநரும், தேர்தல் இயந்திர ஒருங்கிணைப்பாளருமான செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

தேர்தல் நாளில் PACABA பொறுப்புகளை திறம்படச் செய்யக்கூடிய ஒரு கட்சியாக பொதுத்தேர்தலை எதிர்நோக்க ம.இ.கா தயாராக இருக்க முடியும் .

தெளிவான செயல்பாடுகள் மற்றும் தேர்தல் இயந்திரத்தின் திறனுக்கு ஏற்ப பங்காற்றக் கூடிய ஆற்றல் கொண்டிருப்பதோடு, கட்சிக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கையும் கவனமாகப் பாதுகாக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு அடிப்படையாக இது அமைகிறது என சிவராஜ் சுட்டிக்காட்டினார்.

வெளிப்புற ஆதாரங்களைச் சார்ந்து இல்லாமல், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தேர்தல் இயந்திரத்தை நிர்வகிக்கும் திறன் கொண்ட சுயமான கட்சியை உருவாக்குவதே ம.இ.காவின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதோடு விக்னேஸ்வன் வலுயுறுத்தியபடி , ம.இ.கா தன்னிறைவு பெற்ற அரசியல் கட்சியாக செயல்பட முடியும் என்பதை உறுதி செய்வதற்கு PACABA திட்டம் அமையும் என்பதாகவும் சிவராஜ் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!