ஸ்கூடாய், நவ 26 – பொது அமைப்புகள் சமுதாய உணர்வோடு செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இங்கு ஸ்கூடாய் இந்திய கல்வி,சமூகநல மேம்பாட்டு இயக்கம் ஏற்பாடு செதிருந்த வசதி குறைந்தவர்களுக்கான தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கல்ந்துக்கொண்டு சிறப்புரையாற்றிய ஜொகூர் மஇகாவின் முன்னாள் தலைவர் டத்தோ கே.எஸ்.பாலகிருஷ்ணன் சமுதாயத்திற்கு நன்மையை கொண்டு வரும் திட்டங்களை பொது அமைப்புக்கள் கொண்டிருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முன்னதாக ஸ்கூடாய் இந்திய கல்வி,சமூகநல மேம்பாட்டு இயக்கம் சமுதாயத்திற்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவது கண்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்ட அவர் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் சிறந்த சேவை மனப்பாண்மையை கொண்டவர்கள் எனவும் புகழாரம் சூட்டினார்.
ஸ்கூடாய் தாமான் நேசா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்கத்தின் தலைவர் எம்.கே.வள்ளுவன் முன்னிலையில் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் பிரகாஷ் மற்றும் துணைத் தலைவர் ஐ.ஜெயசிம்மன் ஆகியோரின் தலைமையில் இதர பொறுப்பாளர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த தீபாவளி அனபளிப்பு நிகழ்வில் 50 பேருக்கு சுமார் 200 வெள்ளி மதிப்புள்ள உணவுப் பொட்டலங்களும் தலா 50 வெள்ளி ரொக்கமும் வழங்கப்பட்ட வேளையில் உடன் கலை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் மற்ற பிரமுகர்களாக டத்தோ எம்.சந்திரன்,இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி மோகன் ராமசாமி,மஇகா இஸ்கண்டார் புத்ரி தொகுதி தலைவர் வி.சங்கரபாண்டியன்,துணைத் தலைவர் கே.சேகரன் உட்பட திரளானவர்களும் பங்கு கொண்டனர். இதனிடையே 17 ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த அன்பளிப்பு வழங்கும் நிகழ்விற்கு ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பிரகாஷ் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்