Latestமலேசியா

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கார்களை அப்புறப்படுத்த உதவிய ஆடவர்களுக்குக் குவியும் பாராட்டு

கோலாலம்பூர், அக்டோபர்-28, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை, சில ஆடவர்கள் ஒன்று சேர்ந்து தூக்கி நகர்த்தும் வீடியோ வைரலாகி, வலைத்தளவாசிகளின் பாராட்டைப் பெற்று  வருகிறது.

வெளிநாட்டவர்களையும் உள்ளடக்கிய அந்த ஆடவர் குழு, மழைக்கும் மத்தியில் பழுப்பு நிற காரை தூக்குவது @abgzul08 எனும் டிக் டோக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட அவ்வீடியோவில் தெரிகிறது.

சாலையின் இடப்புறம் இடைஞ்சலாக இருந்த சிவப்பு நிற காரையும் நகர்த்தி, பேருந்து செல்வதற்கு அவர்கள் வழியமைத்துக் கொடுத்தனர்.

நமக்கென்ன என்று போகாமல், மற்றவர் நலனில் அக்கறைக் கொண்டு மழையையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கிய அவ்வாடவர்களை வலைத்தளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!